#BREAKING: தங்கம் வென்றார் பி.வி.சிந்து!
காமன்வெல்த் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார் பிவி சிந்து.
காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்றிருந்தார்.