Breaking News: சென்னையில் நடைபெற இருந்த ஐபில் இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. 2019 ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இறுதிப்போட்டியை ஐதராபாத்துக்கு மாற்றம் செய்து உள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே என மூன்று கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்காததால் மாற்றம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 49000 பேர் பார்க்க கூடிய இந்த மைதானத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி தரவில்லை. அந்த மூன்று கேலரிகளில் 12000 பேர் பார்ப்பதாக வசதிகள் இருந்தது.அதனால் இடவசதி கருதி இறுதிப் போட்டி மாற்றம் செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் தகுதி சுற்று போட்டியும், இரண்டாவது தகுதி போட்டி, வெளியேற்றுதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி மே 12-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.