#BREAKING: கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்த நியூசிலாந்து!
பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து என அறிவிப்பு.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட சென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவசரமாக நாடு திரும்புகிறது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் இன்று ஒருநாள் போட்டி தொடங்க இருந்த நிலையில், நியூசிலாந்து அரசு எச்சரிக்கையால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி வீரர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்படலாம் என்று அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான தொடர் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட வந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக முழு தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
The BLACKCAPS are abandoning their tour of Pakistan following a New Zealand government security alert.
Arrangements are now being made for the team’s departure.
More information | https://t.co/Lkgg6mAsfu
— BLACKCAPS (@BLACKCAPS) September 17, 2021