ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவோ ஐபிஎல் 2021 லீக் போட்டி ஐந்து முறை சாம்பியன்கள் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸுடன் செப்டம்பர் 19 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டி ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும். ஏனெனில், கொரோனா நிலைமை காரணமாக ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டியை காண ரசிகர்கள் செப்டம்பர் 16 முதல் www.iplt20.com என்ற வலைத்தளத்திலும் PlatinumList.net என்ற வலைத்தளத்திலும் டிக்கெட்டுகளை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விதிமுறைகளை மனதில் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…