#BREAKING: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி-20 அணி அறிவிப்பு.!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல இளம் வீரர்கள் முதன்முறையாக அணிக்குள் இடம்பெற்றிருந்தனர்.
இதேபோல் தற்போது டி-20யில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடும் இந்திய அணிக்கு, ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய டி-20 அணி:
இஷான் கிஷன் (WK), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ் (VC), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா (C), அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார்.