BREAKING: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இலங்கை-நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், டெஸ்ட் தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறுகிறது.
இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்டில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ரன்களும், நியூசிலாந்து 373 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்களும் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆட்டத்தின் கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 285 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி இந்த போட்டியில் தோல்வியுற்றதால், டெஸ்ட் தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா வரும் ஜூன் 7 ஆம் தேதி மோதுகிறது.
India have qualified for the World Test Championship final!
They’ll take on Australia at The Oval for the #WTC23 mace!
More: https://t.co/75Ojgct97X pic.twitter.com/ghOOL4oVZB
— ICC (@ICC) March 13, 2023