விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் VJD முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக், இந்தரஜித் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
இதில், தினேஷ் கார்த்திக் 116, இந்தரஜித் 80 ரன்கள் குவித்தனர். இறுதியாக தமிழக அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 314 ரன்கள் எடுத்தனர். ஹிமாச்சல பிரதேச அணியின் பந்துவீச்சில் ஜெய்ண்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இமாச்சல பிரதேச அணி VJD முறையில் 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 299 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேச அணியின் தொடக்க வீரர் சுபம் அரோரா 136* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 5 முறை சாம்பியனான தமிழக அணியை வீழ்த்தி இமாச்சல பிரதேசம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…