முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பால் காலமானார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், 1983ல் உலக வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு மனைவி ரேணு சர்மா, இரண்டு மகள்கள் பூஜா, ப்ரீத்தி மற்றும் மகன் சிராக் சர்மா உள்ளனர்.
70களின் பிற்பகுதியிலும், 80களின் பிற்பகுதியிலும் ஒரு சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையில், ஆகஸ்ட் 11, 1954இல் லூதியானாவில் பிறந்த 66 வயதான யஷ்பால் சர்மா முன்னாள் பஞ்சாப் கிரிக்கெட் வீரர், ஒரு திறமையான நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக கருதப்பட்டார்.
இந்தியாவுக்காக அவர் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1979 இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். யஷ்பால் இரண்டு சதங்களுடன் 1606 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 140 ரன்களும், சராசரி 33.45 ரன்களும், ஒன்பது அரைசதங்கள் வைத்துள்ளார்.
1978ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே நேரத்தில் 42 போட்டிகளில் 28.48 சராசரியாக 883 ரன்கள் எடுத்துள்ளார். ஹரியானா, ரயில்வே உள்ளிட்ட மூன்று அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ரஞ்சியில், யஷ்பால் 160 போட்டிகளில் விளையாடியபோது 8, 933 ரன்கள் எடுத்தார். அதில், 21 சதங்கள் அடங்கும் மற்றும் அதிகபட்ச 201 ரன்கள் விளாசியுள்ளார்.
1983 உலகக் கோப்பையில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது. இதில் சர்மா முக்கிய பங்கு வகித்தார். சர்மா 120 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 40 ரன்களும், கடினமான சூழலில் இங்கிலாந்துக்கு எதிராக 61 ரன்கள் விளாசினார். இறுதியாக இந்தியா உலகக் கோப்பையை வென்றது.
தனது ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), பஞ்சாப் மற்றும் ஹரியானா கிரிக்கெட் அணியில் பல்வேறு விதமாக செயல்பட்டார். மேலும் இந்திய டிவியில் கிரிக்கெட் நிபுணராகவும் பணியாற்றினார். இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று யஷ்பால் சர்மா காலமானார். இவரது மறைவிற்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…