#Breaking: உலகக் கோப்பை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்.!

Default Image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பால் காலமானார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், 1983ல் உலக வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு மனைவி ரேணு சர்மா, இரண்டு மகள்கள் பூஜா, ப்ரீத்தி மற்றும் மகன் சிராக் சர்மா உள்ளனர்.

70களின் பிற்பகுதியிலும், 80களின் பிற்பகுதியிலும் ஒரு சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையில், ஆகஸ்ட் 11, 1954இல் லூதியானாவில் பிறந்த 66 வயதான யஷ்பால் சர்மா முன்னாள் பஞ்சாப் கிரிக்கெட் வீரர், ஒரு திறமையான நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக கருதப்பட்டார்.

இந்தியாவுக்காக அவர் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1979 இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். யஷ்பால் இரண்டு சதங்களுடன் 1606 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 140 ரன்களும், சராசரி 33.45 ரன்களும், ஒன்பது அரைசதங்கள் வைத்துள்ளார்.

1978ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே நேரத்தில் 42 போட்டிகளில் 28.48 சராசரியாக 883 ரன்கள் எடுத்துள்ளார்.  ஹரியானா, ரயில்வே உள்ளிட்ட மூன்று அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ரஞ்சியில், யஷ்பால் 160 போட்டிகளில் விளையாடியபோது 8, 933 ரன்கள் எடுத்தார். அதில், 21 சதங்கள் அடங்கும் மற்றும் அதிகபட்ச 201 ரன்கள் விளாசியுள்ளார்.

1983 உலகக் கோப்பையில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது. இதில் சர்மா முக்கிய பங்கு வகித்தார். சர்மா 120 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 40 ரன்களும், கடினமான சூழலில் இங்கிலாந்துக்கு எதிராக 61 ரன்கள் விளாசினார். இறுதியாக இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

தனது ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), பஞ்சாப் மற்றும் ஹரியானா கிரிக்கெட் அணியில் பல்வேறு விதமாக செயல்பட்டார். மேலும் இந்திய டிவியில் கிரிக்கெட் நிபுணராகவும் பணியாற்றினார். இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று யஷ்பால் சர்மா காலமானார். இவரது மறைவிற்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்