ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு.
ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். தீபக் சஹார் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சாஹர் 2018 முதல் சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்து நான்கு சீசன்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் வீரர்களின் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சென்னை மீண்டும் வாங்கியது. காயம் காரணமாக தீபக் சஹார் விலகிய நிலையில், இவருக்கு பதில் மாற்று வீரர் யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…