சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதி இல்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பிப் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு கிரிக்கெட் போட்டிகளை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பிப்.13ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அகமதாபாத்தில் நடைபெறும் 3,4வது டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…