#Breaking:ஐபிஎல் 2022 அட்டவணை வெளியீடு;முதல் போட்டி யாருக்கு தெரியுமா?..!

Default Image

ஐபிஎல் 2022, 15-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முன்னதாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி,மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில்,மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள், மும்பை – பிரபோர்ன் மைதானத்தில் (சிசிஐ) 15 போட்டிகள், மும்பை – DY பாட்டீல் மைதானத்தில் 20 போட்டிகள், புனே – எம்சிஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகள் என மொத்தம் 70 லீக் போட்டிகள் நான்கு மைதானங்களில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள் இரண்டு குழுக்களாக (IPL 2022 Groups) பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் MI, KKR, RR, DC, LSG, Group B-யில் CSK, SRH, RCB, PBKS, GT ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 5 அணிகளுடன் இரண்டு முறை விளையாடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை விளையாடும். அதில் 2 ஹோம் மேட்சுகள், 2 வெளியூரில் விளையாடும் மேட்சுகளும் அடங்கும்.

இந்நிலையில்,ஐபிஎல் 2022 15வது சீசன் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, மார்ச் 26 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதலுடன் ஐபிஎல் கோப்பைக்கான போட்டி தொடங்குகிறது. இப்போட்டியானது வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்