சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பாக இருப்பார். ஒரு சில வருடங்களில் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் வலம் வந்துள்ளார்.
இவரது பீல்டிங் சென்னை அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போது இவருக்கு தொடையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஆடுவது சந்தேகமாக மாறியுள்ளது.
மேலும் இந்த காயம் காரணமாக இரண்டு வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் சென்னை அணியின் மருத்துவர் குழு அறிவித்துள்ளது. இதனால் இவர் இவரது இழப்பை சென்னை அணி எவ்வாறு ஈடு செய்யப் போகிறது என்பது கேள்விக்குறியே. ஏற்கனவே சென்னை அணி பந்து வீச்சுக்கு மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…