காயம் காரணமாக நட்சத்திர வீரருக்கு 2 வாரம் ஓய்வு: சென்னை அணிக்கு பெருத்த அடி!
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பாக இருப்பார். ஒரு சில வருடங்களில் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் வலம் வந்துள்ளார்.
இவரது பீல்டிங் சென்னை அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போது இவருக்கு தொடையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஆடுவது சந்தேகமாக மாறியுள்ளது.
மேலும் இந்த காயம் காரணமாக இரண்டு வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் சென்னை அணியின் மருத்துவர் குழு அறிவித்துள்ளது. இதனால் இவர் இவரது இழப்பை சென்னை அணி எவ்வாறு ஈடு செய்யப் போகிறது என்பது கேள்விக்குறியே. ஏற்கனவே சென்னை அணி பந்து வீச்சுக்கு மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.