பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!
பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி பந்துவீசி வருகிறது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இன்று இந்திய நேரப்படி காலை 5 மணி அளவில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் , டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் புதுமுக தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக போட்டியிலேயே அரை சதம் விளாசி, 60 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் lbw விக்கெட் ஆனார். தற்போது, 25 ஓவர்கள் கடந்த நிலையில், உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் முறையே 38 மற்றும் 12 ரன்கள் எடுத்து களத்தில் ஆடி வருகின்றனர்.
இந்திய அணி சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாடி வருகின்றனர். சுப்மன் கில்லிற்கு இன்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி சார்பாக, பேட் கம்மின்ஸ் தலைமையில், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி , மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.