பாக்ஸிங் டே டெஸ்ட்.. 3-நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 ரன் முன்னிலை..!
நேற்று முன்தினம் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரஹானே, ஜடேஜா சிறப்பாக விளையாடி ரஹானே சதமும், ஜடேஜா அரைசதமும் விளாசினார்.
இறுதியாக இந்திய அணி 115.1 ஓவரில் 326 ரன்கள் எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை இன்று தொடங்கியது. தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே ஜோ பர்ன்ஸ் 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர்,இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 28 ரன்கள் மட்டும் எடுத்து அடுத்து களம்கண்ட டிராவிஸ் 17 , ஸ்மித் 8 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 66 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்தனர். இதனால், 3 ரன்கள் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 2, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்,
பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.