டெத் ஓவர்களில் பந்துவீசுவது எளிதானது அல்ல..! – சிஎஸ்கே பந்துவீச்சாளர்
டெத் ஓவர்களில் பந்துவீசுவது கடினம் என சிஎஸ்கே பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
16-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, நோ பால் வீசியது தொடர்பாக ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
கேப்டன் தோனி எச்சரிக்கை :
இதனையடுத்து, போட்டியில் சென்னை பந்துவீச்சாளர்கள் 13 வைடுகள் மற்றும் 3 நோ-பால்களை வீசியது தொடர்பாக அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர், தனது அணியின் பந்து வீச்சாளர்கள் நோ-பால் மற்றும் வைடு பந்துகளை வீசுவதை குறைக்க வேண்டும். இதனால் நாங்கள் முடிவு செய்துவைத்திருந்த பந்துகளை விட கூடுதல் பந்துகளை வீசுகிறோம் என்று கூறினார்.
கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவேன் :
மேலும், தனது அணியினர் அத்தகைய பந்துவீச்சைக் குறைக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாடுவார்கள் என்றும் இது எனது இரண்டாவது எச்சரிக்கை, இதையும் கேட்காவிட்டால் நான் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவேன் என்று தோனி கூறியுள்ளார்.
#CSK bowlers today bowled 13 wides and 3 no balls against #LSG and Captain @msdhoni, in his inimitable style, had this to say. ????????#TATAIPL | #CSKvLSG pic.twitter.com/p6xRqaZCiK
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
நோ-பால் வீசுவது குற்றம் :
இதற்கு பதிலளித்த துஷார் தேஷ்பாண்டே, டி20 கிரிக்கெட்ட போட்டியில் நோ-பால் வீசுவது குற்றம் என்று ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவிடம் டெத்-பவுலிங் கற்றுக் கொள்ள ஆவலுடன் இருப்பதாகவும், அவருடைய இடத்தை என்னால் நிரப்ப முடியாமல் போகலாம், ஆனால் அதனைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பேன் என்று தேஷ்பாண்டே கூறினார்.
டெத் ஓவர் பந்துவீச்சு எளிதல்ல:
மேலும், டெத் ஓவர்களில் பந்துவீசுவது எளிதானது அல்ல. அத்தகைய பந்துவீச்சை நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். எங்கள் பயிற்சியாளர் பிராவோவின் பந்துவீசும் நுட்பங்களை டெத் ஓவர்களில் பயன்படுத்த முயற்சிக்கிறேன் என்று துஷார் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.