இந்திய கேப்டன் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக அணியின் பவுலர்கள். இலங்கை அணியின் பேட்டிங் வரிசையை சிறப்பாக கட்டுபடுத்தினர். இந்த போட்டியின் ஆடுகளம் பவுலர்களுக்கு உகந்ததாக இல்லை. ஆனாலும், தங்களின் கடின பயிற்சியால் சிறப்பாக பந்துவீசினர். இது ஒரு முழுமையான அணியின் வெற்றியாகும் என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…