சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அபிஷேக் தன்வார் 1 பந்தில் 18 கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது, சேலம் அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் அபிஷேக் தன்வார் ஒரு பந்தில் 18 ரன்கள் கொடுத்தார்.
இதன் மூலம் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அதிகம் ரன்கள் கொடுத்த சேலம் ஸ்பார்டன்ஸ் வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். நேற்றைய போட்டியின் கடைசி பந்தில் அபிஷேக் தன்வார் 18 ரன்கள் கொடுத்தார். 5 பந்துகள் அவர் வீசிய நிலையில் 6-வது பந்தை ஒரு யார்க்கராக வீசினார். அந்த பந்து நேராக ஸ்டெப்ம்புக்கு சென்று பேட் செய்து கொண்டிருந்த சஞ்சய் யாதவ் போல்ட் ஆனார்.
ஆனால், அந்த பந்து இறுதியில் நோ-பாலில் முடிந்தது. அவர் வீசிய அந்த பந்தை பேட்டர் சஞ்சய் யாதவ் ஒரு சிக்ஸரை விளாசினார். ஆனால், அந்த பந்தும் நோ பால் ஆனது. பிறகு மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் 2 ரன்கள் சஞ்சய் யாதவ் ஓடினார். அதுவும் நோ பால் ஆனது. பிறகு ஒரு ஒரு வைட் பாலும் ஆவர் வீசினார்.
பிறகு கடைசி முறையான பந்து வீச்சில் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார். (NB, 6NB, 2NB, WD, 6) இதன் மூலம் அபிஷேக் தன்வார் 1 பந்தில் 18 ரன்களை கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 217 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…