ரோஹித்- கோலி 2 பேரும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Published by
பால முருகன்

உலககோப்பை டி20 2024 : தொடர் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இதுவரை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்கார ஜோடியான விராட் கோலி -ரோஹித் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். எனவே, இந்த உலககோப்பை டி20 2024 தொடரின் அதிரடி ஜோடி பட்டியலில் இவர்கள் இருவருக்கும் இடமில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா ” இந்த முறை ரோஹித் மற்றும் விராட் ஆகியோரின் பெயரை  அதிரடி தொடக்க ஆட்டக்கார ஜோடி பட்டியலில் வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்போது சரியான ஒரு நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன். இரண்டாவதாக, அந்தக் கண்ணோட்டத்தில் நாம் அவர்களை பார்த்தால்  நிச்சயமாக அந்த அளவிற்கு அதிரடியாக விளையாடமாட்டார்கள். நிதானமாக விளையாட கூடிய திறமையான வீரர்கள் தான்.

virat and rohit [File Image]
இருப்பினும், இந்த உலகக்கோப்பையில் அவர்கள் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடவில்லை. எனவே, கிரிக்கெட் ரசிகர் என்ற பார்வையில், நான் சொல்லவேண்டும் என்றால் அவர்கள் இந்த அதிரடி பட்டியலில் இல்லை என்று நான் உணர்கிறேன். ஜோஸ் பட்லருடன் ஃபில் சால்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் உடன் டேவிட் வார்னர்  அந்த பட்டியலில் இருப்பார்கள்.  இந்த இரண்டு ஜோடிகளில் முதலில் எந்த ஜோடி இருக்கும் என்பதை தேர்வு செய்வது ஒரு கடினமான விஷயம் என்று நான் சொல்வேன்.

ஏனென்றால், இரண்டு ஜோடிகளும் அந்த அளவுக்கு அருமையாகவும், அதிரடியாகவும், விளையாடி வருகிறது. எதாவது ஒரு ஜோடியை தேர்வு செய்யவேண்டும் என்றால் நான் உண்மையில் பில் சால்ட் மற்றும் பட்லர் ஜோடி கிட்ட செல்கிறேன். இருப்பினும், இந்த ஜோடிக்கு  டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் சமமாக ஆபத்தானவர்கள்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

46 minutes ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

4 hours ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

6 hours ago