ரோஹித்- கோலி 2 பேரும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

உலககோப்பை டி20 2024 : தொடர் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இதுவரை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்கார ஜோடியான விராட் கோலி -ரோஹித் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். எனவே, இந்த உலககோப்பை டி20 2024 தொடரின் அதிரடி ஜோடி பட்டியலில் இவர்கள் இருவருக்கும் இடமில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா ” இந்த முறை ரோஹித் மற்றும் விராட் ஆகியோரின் பெயரை அதிரடி தொடக்க ஆட்டக்கார ஜோடி பட்டியலில் வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்போது சரியான ஒரு நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன். இரண்டாவதாக, அந்தக் கண்ணோட்டத்தில் நாம் அவர்களை பார்த்தால் நிச்சயமாக அந்த அளவிற்கு அதிரடியாக விளையாடமாட்டார்கள். நிதானமாக விளையாட கூடிய திறமையான வீரர்கள் தான்.
ஏனென்றால், இரண்டு ஜோடிகளும் அந்த அளவுக்கு அருமையாகவும், அதிரடியாகவும், விளையாடி வருகிறது. எதாவது ஒரு ஜோடியை தேர்வு செய்யவேண்டும் என்றால் நான் உண்மையில் பில் சால்ட் மற்றும் பட்லர் ஜோடி கிட்ட செல்கிறேன். இருப்பினும், இந்த ஜோடிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் சமமாக ஆபத்தானவர்கள்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025