Yuvraj Singh [File Image]
சென்னை : டி20 உலகக் கோப்பை 2024 தூதர் யுவராஜ் சிங் வரவிருக்கும் போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் எந்தெந்த இடத்தில் விளையாடினாள் சரியாக இருக்கும் என்பது பற்றி பேசியுள்ளார்.
ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்படவுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான வலுவான இந்திய அணி ஜூன் 5-ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உலகக் கோப்பை 2024 தூதவருமான யுவராஜ் சிங் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை தேர்வு செய்தார்.
ஐசிசிக்கு அவர் அளித்த பேட்டியில் பேசிய அவர் ” ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் நிச்சயமாக ஓபன் ஆக இறங்கி விளையாட வேண்டும். அவர்களை தொடர்ந்து விராட் கோலி 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வரவேண்டும். அதற்கு பிறகு, சூர்ய குமார் யாதவ் வரவேண்டும். இப்படி இறங்கி விளையாடினாள் கண்டிப்பாக நன்றாக இருக்கும். கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்வேன்.
அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் வேண்டாம் என்று நினைக்கவேண்டாம் அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும், ரிஷப் இந்தியாவுக்காக பல முறை கேம்களை விளையாடி இருப்பதால் நான் அவரை தேர்வு செய்வேன். அதைப்போல, ஒரு வீரர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றால் அவருடைய பார்ம் மோசமாக இருக்கிறது என்று பார்கிறார்கள்.
குறிப்பாக ஹர்திக் பாண்டிய சரியாக செயல்படவில்லை அவருடைய பார்ம் சரியில்லை என்று சிலர் ஐபிஎல் வைத்து சொல்கிறார்கள். ஆனால், ஐபிஎல் மட்டும் தான் பார்ம் இல்லை கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை போட்டியில் அவருடைய விளையாட்டு தனித்துவமாக இருக்கும். இந்த உலகக் கோப்பையில் அவர் உண்மையிலேயே ஏதாவது சிறப்பாகச் செய்வார் என்று நான் நினைக்கிறேன்.
அதைப்போல தான் சிவம் துபேவும், அவர் இந்தியாவுக்காக விளையாடிய கடைசி டி20 தொடரில், அவர் நன்றாக விளையாடினார் என்று நினைக்கிறேன். மேலும் அவர் ஐபிஎல் போட்டியிலும் மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்” என்றும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…