ட்விட்டரில் மீண்டும் தோனிக்கு வழங்கப்பட்ட ப்ளூடிக்..!
தோனி ட்விட்டர் கணக்கில் மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் வழங்கியுள்ளது.
அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டுத்துறை பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் கணக்கை வெரிஃபைட் செய்து ப்ளூ டிக் வாங்கி வருகின்றனர். காரணம் தங்கள் பெயரில் போலி கணக்கை உருவாக்கக்கூடாது என்பதற்காக, ப்ளூ டிக் உள்ளவர்கள் தங்கள் கணக்கில் அவ்வபோது பதிவுகளை பதிவிட்டு வரவேண்டும். அப்படி பதிவுகள் பதிவிடபட்சத்தில் ட்விட்டர் அவர்களின் ப்ளூ டிக்கை நீக்கிவிடும்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. தோனி கடைசியாக கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதன் பின் அவரது ட்விட்டர் கணக்கில் எதுவும் பதிவிடவில்லை. இதனால், அவரது ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தோனியின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ட்விட்டர் மீண்டும் ப்ளூ டிக்கை வழங்கியுள்ளது. ஆனால், ட்விட்டர் நிறுவனம் இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டது. 6 மாதமாக அவரது ட்விட்டர் கணக்கில் பதிவு எதுவும் செய்யாததால் ப்ளூ டிக்கை நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்து பின் மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.