வெளுத்து வாங்கிய சென்னை.., உத்தப்பா அரைசதம் விளாசல் ..! 211 ரன்கள் இலக்கு ..!
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
சென்னை அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாமல் வெளியேறினர். அதனால், இந்த போட்டியில் ருதுராஜ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆகி மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் மொயின் அலி களமிறங்கினார். தொடக்க வீரராக களம் இறங்கி ராபின் உத்தப்பா 27 பந்துகளில் அரை சதம் விளாசி பெவிலியன் திரும்பினார். அதில் 8 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.
களத்திலிருந்த மொயின் அலி அதிரடியாக விளையாடி 35 ரன்கள் குவித்து நடையைக் கட்டினார். பின்னர் ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சிறப்பாக உயர்த்தினர். சிறப்பாக விலையாடிய அம்பதி ராயுடு 27 ரன் எடுத்து போல்ட் ஆனார். இருப்பினும் மறுபுறம் இருந்த ஷிவம் துபே 49 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய தோனி முதல் பந்தில் சிக்ஸரும் , 2-பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தனர். லக்னோவில் ரவி பிஷ்னாய், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை 2 தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.