#IPL2020: வெளுத்து வாங்கிய பென் ஸ்டோக்ஸ், சாம்சன்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
மும்பை அணியின் முதலில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், டி காக் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 6 ரன் எடுத்து டி காக் வெளியேற பின்னர், சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் 37 ரன் எடுத்து வெளியேறினார்.
இதைதொடர்ந்து, திவாரி, சூர்யகுமார் யாதவ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த திவாரி 40, சூர்யகுமார் யாதவ் 34 ரன்னில் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்ப பின்னர், களம் கண்ட ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 21 பந்தில் 60 ரன்கள் விளாசி கடைசிவரை காலத்தில் நின்றார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணி 196 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா,
பென் ஸ்டோக்ஸ் இருவரும் இறங்கினர்.
தொடக்கத்திலே ராபின் உத்தப்பா 13 ரன் எடுத்து வெளியேற , பின்னர், இறங்கிய கேப்டன் ஸ்மித் வந்த வேகத்தில் 11 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் உடன் சஞ்சு சாம்சன் கூட்டணி அமைத்தார். இருவரும் அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதமும் , சஞ்சு சாம்சன் அரைசதமும் விளாசினர். கடைசிவரை களத்தில் பென் ஸ்டோக்ஸ் 107* , சஞ்சு சாம்சன் 54* ரன்களுடன் நின்றனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 18. 2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.