இந்திய அணியின் வெறித்தனமான ஆட்டம் “பெருங்சுவர்” டிராவிட்டுக்கு பிறந்தநாள் பரிசு..!

இன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு பிறந்த நாள். இன்று இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் போராடி டிரா செய்தது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியின் ஆட்டம் “பெருங்சுவர்” ராகுல் டிராவிட்டுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு என கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏனென்றால் இந்த போட்டியில் அஸ்வின் 128 பந்திற்கு 39* ரன்களும், ஹனுமா விஹாரி 161 பந்திற்கு 23* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட்டை ரசிகர்கள் இந்திய அணியின் “பெருங்சுவர்” என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி டிரா செய்வதற்கு பண்ட், புஜாரா , அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய 4 பேரின் பங்கு அதிகமாகவே இருந்தது. காரணம் இந்த போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. இதனால், பண்ட், புஜாரா இருவரின் கூட்டணியில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது. இவர்கள் இருவரும் 148 ரன்கள் குவித்தனர்.
அதேபோல ஆட்டம் முடிவில் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட்டை பறிகொடுக்கமல் விளையாடி வந்தனர். இதனால் இந்திய அணி டிரா செய்வதற்கு மிகவும் பெரும் உதவியாக இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் இந்திய அணியையும், இந்த நான்கு வீரர்களையும் பாராட்டி வருகின்றனர்.