GTvsMI : ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி ..!! வெற்றி யாருக்கு ..?
GTvsMI : 17-வது ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக இன்று 7.30 மணிக்கு குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி ஐபிஎல் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்க பட்ட போட்டியாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா.
கடந்த இரண்டு வருடங்கள் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய இவர் தற்போது மீண்டும் அவரது பழைய அணியான மும்பை அணிக்கு திரும்பியது மட்டும் அல்லாமல் மும்பை அணியின் கேப்டனாகவும் களமிறங்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டியிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
நேருக்கு நேர் :
இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் 4 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் மும்பை அணி 2 முறையும், குஜராத் அணியும் 2 முறையும் வெற்றி பெற்று உள்ளனர். நேருக்கு நேரில் சமநிலையில் இருப்பதால் எந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று போட்டியின் முடிவிலே தெரியவரும்.
ஆனாலும், மும்பை அணியை விட குஜராத் அணி சற்று பலமாக இருப்பதால் ஐபிஎல் ரசிகர்கள் குஜராத் அணி தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று சமூகவலைத்தளத்தில் பேசி வருகிறார்கள். குஜராத் அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை அறிக்கை :
அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவ கூடும். இரவில் ஒட்டுமொத்த வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. மழை பொழிவுக்கான வாய்ப்புகள் கிடையாது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 24° ஆக இருப்பதுடன் மணிக்கு 28 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பேட்டிங் செய்ய ஏதுவாக அமையும்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI) :
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன்.
மும்பை அணி வீரர்கள் :
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹால் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரிட் பும்ரா, ஆகாஷ் மத்வால்.