ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 

ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது இந்த போட்டி ஐபிஎல் தொடரின் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொண்ட போட்டியாக நடைபெற உள்ளது. 

இந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18.1 ஓ அவர்களிலோ சென்னை அணியை வீழ்த்தினால் பெங்களூரு அணி சென்னை அணியை விட ரன்ரேட் அதிகமாக பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி அடைவார்கள். 

இன்றைய போட்டியானது சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதால் பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு பெங்களூருவில் ஆரஞ்சு அலர்ட் கொடுத்ததால் பெங்களூர் அணி ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனர்.

தற்போது வரை பெங்களூரில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தான் தெரிகிறது. ஒருவேளை இந்த போட்டியானது மழையால் நடைபெறாமல் போனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேருக்கு நேர் : 

இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் தலா 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது அதில் 21 போட்டிகள் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது அதேபோல் 10 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியானது முடிவில்லாமல் இருக்கிறது. 

மேலும் இந்த இரண்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இடம்பெருவார்களா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். பெங்களூர் அணியில் அதிரடி ஆட்டக்காரரான வில் ஜாக்ஸ் இங்கிலாந்து வீரர் என்பதால் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வாரா என்பதைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் அவருக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர்  மேக்ஸ்வெல் இடம் பெறுவார் என்று தகவல்கள் தெரிகிறது. அதேபோல சென்னை அணியும் ஆல் ரவுண்டரான மொயின் அலி இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவதாக கருதி நாம் தற்போது எதிர்பார்க்கப்படும் 11 வீரர்களை பற்றி பார்ப்போம். 

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் 

பெங்களூரு அணி

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், முகமது சிராஜ், தினேஷ் கார்த்திக், கேமரூன் கிரீன், ரஜத் படிதார்,  ரீஸ் டாப்லி, கர்ரன் சர்மா,  அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், லாக்கி பெர்குசன்.

சென்னை அணி 

ருத்வராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜின்கியா ரஹானே, ரச்சின் ரவிந்த்ரா, டேரில் மிச்சல், மொயின் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீட் சிங், மகேஷ் தீக்ஷனா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்