பிரமாண்ட சிக்ஸர்… ஜன்னல் கண்ணாடியை உடைத்த இந்திய வீரர் ரிங்கு சிங்!

Rinku Singh

தென்னைப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் பூங்கா, க்கெபர்ஹா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மழை குறிக்கீட்டால் இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன்பின், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனிடையே, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷூப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், திலக் வர்மா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

களத்தில் அவமரியாதை? இந்திய கேப்டனின் விக்கெட்டுக்கு பின் ஷூவை எடுத்து கொண்டாடத்தில் ஈடுபட்ட ஷம்சி!

4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை ரிங்கு சிங் பதிவு செய்தார்.

ரிங்கு பேட்டிங்கில் இறங்கிய போது இந்திய அணி 55/3 என்ற நிலையில் இருந்தது. 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்ஸர்ஸ் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களை விளாசினார். இதில்,  தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்களை விளாசி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில், பிரமாண்டமாக அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த ஒரு அறையின் கண்ணாடியை பதம் பார்த்தது.

அதாவது, இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் வீசிய 19-வது ஓவரில் 4, 5-வது பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து விளாசினார். அந்த பந்து ஊடக அறையின் மீது விழுந்ததில் அறையின் கண்ணாடி நொறுங்கியது. எனவே, ரிங்கு சிங் அடித்த அந்த சிக்ஸரின் வீடியோ மற்றும் உடைந்த கண்ணாடியின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்