உலகக்கோப்பை : எங்களின் பந்து வீச்சை கவனமாக தான் பதம்பார்க்க வேண்டும்..!புவனேஷ் வீச்சு

Default Image

இந்திய அணி உலககோப்பையில் பங்கேற்க உள்ளது.இந்த வருடம் இந்திய அணி அறை இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலககோப்பை நெருங்க நெருங்க விராட் கோலியின் ஐபிஎல் ஆட்டம் குறித்த  விமர்சனம் மற்றும் டோனியின் ஆட்டம் குறித்த விமர்சனம் போன்றவை கடும் சர்ச்சையாக்கிய நிலையில் விராட் இதற்கு பதிலளித்து முடிவு கட்டினார்.

Related image

இந்திய அணியின் பந்து வீச்சை உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் கவனமாக தான் எதிர்கொள்ள வேண்டும் என்று வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர குமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் இங்கிலாந்து ஆடுகளம் பிளாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் பந்து வீச்சு தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.எந்த ஆடுகளமாக இருந்தாலும் இந்திய அணி  பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related image

மேலும் ஐபிஎல் உலகக்கோப்பைக்கு பயிற்சி ஆட்டமாக அமைந்தது என்று தான்       வேண்டும் பந்தை கட்டுக்கோப்பாக வீசினால் , விக்கெட்டுக்கள் வீழும் எனவே  தன்னம்பிக்கை தானாகவே வரும்.ஐதராபாத் அணிக்காக பந்து வீசிய அதே  மாதிரியான ரிதமில் பந்து வீச வேண்டியது   அவசியம். மேலும் பந்து வீச்சில்  ஸ்லோவர் பால், நக்குல் பால் போன்ற வேரியேசன் பந்துகளை வீசுவதிலும் அதன் வேகத்தை கூட்டுவதிலும் தற்போது முன்னேற்றம் அடைந்து உள்ளேன்.

பந்து வீச்சில் நாங்கள் சிறந்த அணியா ?? இல்லையா ???என்று இப்போது  கூற  விரும்பவில்லை.எங்களின் பந்து வீச்சு எப்படி வெளிபடுகிறது என்பதை பொறுத்து தான் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்.

Related image

நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பலத்தை, ஒரு அணியாக சேர்ந்து வெளிப்படுத்துகிறோம். மேலும் ஆடுகின்ற 11அணியில் எந்த அணியாக இருந்தாலும் சிறப்பாக பந்து வீசுவது சிறப்பான விஷயம்.எங்களுடைய பந்து வீச்சு தொடக்கம் மற்றும் டெத் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எதிரணிகள் சற்று கவனமாக எதிர்கொள்வார்கள் .

Related image

எங்களுடைய திட்டத்தை எப்படி வெளிப்படுத்தி விளையாடுகிறோம்  என்பதை பொறுத்து இங்கு எல்லா விஷயங்களும் அமைய போகிறத என்று தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்