BGT2023: விராட் கோலி அரைசதம்; முன்னிலையை நோக்கி இந்தியா, 362/4 ரன்கள் குவிப்பு.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 4-வது நாள் உணவு இடைவேளை முடிவில் இந்தியா 362/4 ரன்கள் குவிப்பு.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்தி சதமடித்த உஸ்மான் கவாஜா 180 ரன்கள் குவித்தார். அவரைப்போன்றே கேமரூன் க்ரீனும் (114 ரன்கள்) தனது முதல் சதமடித்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் தற்போது உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் சதமடித்து(128 ரன்கள்) அசத்தினார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த புஜாரா 42 ரன்னில் ஆட்டமிழக்க, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி தனது அரைசதத்தை(88* ரன்கள்) கடந்து விளையாடி வருகிறார்.
28 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பரத்(25* ரன்கள்) கோலியுடன்(88* ரன்கள்) இணைந்து இருவரும் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியை விட, இந்திய அணி இன்னும் 118 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.