BGT2023: சதம் அடித்த கில், இந்தியா பொறுப்பான ஆட்டம்; 188/2 ரன்கள் குவிப்பு.!

Published by
Muthu Kumar

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 3வது நாள் தேநீர் இடைவேளை முடிவில் இந்தியா 188/2 ரன்கள் குவிப்பு.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே, பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் உஸ்மான் கவாஜா(180 ரன்கள்) மற்றும் கேமரூன் க்ரீன்(114 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 480 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய புஜாரா, கில்லுடன் ஜோடி சேர்ந்து இருவரும் பொறுப்புடன் விளையாடினர்.

சிறப்பாக விளையாடி சதம் கடந்த கில், தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அரைசதமடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் புஜாரா 42 ரன்களில் மர்பி பவுலிங்கில் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளை வரை இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்துள்ளது.

கில் 103* ரன்களிலும், கோலி 0* ரன்களிலும் களத்தில் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியை விட, இந்திய அணி இன்னும் 292 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

22 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

25 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

50 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago