இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 5-வது நாள் உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 73/1 ரன்கள் குவிப்பு.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும், அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆஸ்திரேலிய அணியில் நேதன் லயன் 3 விக்கெட்களும், மர்பி 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5ஆம் நாள் உணவு இடைவேளை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 45* ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சன் 22* ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…