BGT2023 : உணவு இடைவேளைக்கு முன் 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி.!
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 97/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 50 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக டேவிட் வார்னர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். வார்னரை அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே (18 ரன்கள்), அஸ்வின் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், அஸ்வின் வீசிய பந்தில் ஸ்ரீகர் பாரத், கேட்ச் அவுட் ஆகி வந்த வேகத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். பின் டிராவிஸ் ஹெட், 12 ரன்கள் எடுத்து ராகுலின் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டி போல் விளையாடி வரும் உஸ்மான், 8 போர்கள் மற்றும் 1 சிக்ஸருடன் 53 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 2 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்களை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளது.