இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று, டெல்லியில் தொடங்குகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று, டெல்லியில் தொடங்குகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில் இன்று விளையாடும் ஆடும் லெவனில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்றும், காயத்தில் இருந்து குணமடைந்த ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புஜாராவுக்கு இந்த போட்டி 100-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிட்சேல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது, மேலும் அந்த அணியில் டிராவிஸ் ஹெட் இந்த போட்டியில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இந்திய அணியும் இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…