வெளியானது ஐபிஎல் பெஸ்ட் VS பெஸ்ட்…அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க இருக்கும் ஐபிஎல் திருவிழா நேற்று தொடக்கம் ….

Default Image

ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடல் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க இருக்கும் நிலையில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தமுறை ஐ.பி.எல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் இந்தியாவுடன் சேர்ந்து பிசிசிஐ இந்த பாடலை உருவாக்கியுள்ளது. உலக அளவில் நடைபெறும் மிகப்பெரிய க்ளப் கிரிக்கெட் தொடர் இது என்பதை மையமாக கொண்டு இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய 5 மொழிகளில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடகர் சித்தார்த் பஸ்ரூர் 5 மொழிகளில் ராஜீவ் பி பல்லா இசையமைக்க,  பாடியுள்ளார். பாடலுக்கான வீடியோவை தென் ஆப்பிரிக்க இயக்குனர் டேன் மேஸ் இயக்கியுள்ளார்.

“ஐ.பி.எல் தொடரின் சிறப்பம்சமே உலகின் சிறந்த வீரர்கள் மோதும் மிக மிக கடினமான கோப்பை என்பது தான். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தொடர் ஒரு கிரிக்கெட் கொண்டாட்டமாகும். அதை குறிப்பிடும் விதமாகவே இந்த ‘பெஸ்ட்’ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது” என பிசிசிஐ தலைவர் ராகுல் ஜோரி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்