ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது.
இன்றைய நாளின் இரவு 7.30 மணி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் இல்லை என்றால் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணியின் பயணம் கேள்வி குறியாகவே மாறிவிடும்.
தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் ஹைதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
பெங்களூரு அணியில் முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெறவில்லை அவர்களுக்கு பதிலாக சவுரவ் சவுகாணும், பெர்குசனும் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே அணியோடு இந்த போட்டியில் களமிறங்குகிறது.
பெங்களூரு அணி வீரர்கள்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், சவுரவ் சவுகான், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், விஜய்குமார் வைஷாக், ரீஸ் டாப்லி, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்
ஹைதராபாத் அணி வீரர்கள்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ராம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…