பேட்டிங் களமிறங்கும் பெங்களூரு ..!! விராட்டின் ரன் வேட்டை தொடருமா ?
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு எதிர்ப்பார்ப்பு போட்டியாக இன்று மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதியது.
ஐபிஎல் தொடரின் 17 -வது சீசனின் இன்றைய 7.30 மணி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தற்போது மோத தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற
ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்ப்பு நிறைந்த போட்டியில் ஒன்று தான் இன்று நடைபெறும் போட்டியாகும். இந்த தொடரில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கீழே இருப்பதால், புள்ளிபட்டியலில் முன்னேறுவதற்கு இரு அணிகளும் இன்றைய போட்டியில் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த போட்டியில் இதுக்கெனவே ஒரு எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது.
மும்பை அணி வீரர்கள் :
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்.
மும்பை அணி பியூஸ் சாவ்லாவிற்கு பதிலாக ஷ்ரேயஸ் கோபாலை அணியில் சேர்த்துள்ளனர்.
பெங்களூரு அணி வீரர்கள் :
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
பெங்களூரு அணி 3 மாற்றங்களை செய்துள்ளது. அதில் வில் ஜாக்ஸ்ஸுக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும், அதை தொடர்ந்து மஹிபால் லாம்ரோரும், விஜய்குமார் வைஷாக்கும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.