சிக்ஸர் மழையாக பொழிந்த டிராவிஸ் ஹெட், கிளாசென்..பெங்களூருக்கு 288 ரன்கள் இமாலய இலக்கு ..!

RCBvsSRH

ஐபிஎல்2024: முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,  ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

அதன்படி ஹைதராபாத்தில்தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே டிராவிஸ் ஹெட்  தனது ஒரு ருத்ரதாண்ட ஆட்டத்தை தொடங்கினார். மறுபுறம் விளையாடிய  அபிஷேக் சர்மா வெறும் 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து ஹென்ரிச் கிளாசென் களமிறங்க ஏற்கனவே அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வெறும் 39 பந்தில் சதம் விளாசினர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில்  சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கெயில் 30 , யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சதம் விளாசிய 2-வது பந்திலே 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஐடன் மார்க்ராம் ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்ட மறுபுறம் அவருக்கு துணையாக ஐடன் மார்க்ராம்  விளையாடி வந்தார். இதற்கிடையில் கிளாசென் 23 பந்தில் அரைசதம் விளாச அடுத்த 8 பந்தில் 17 ரன்கள் குவித்து, 67 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 35* ரன்கள் குவித்தார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர். இன்றைய போட்டியில் 287 ரன்கள் எடுத்தது மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல்  நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி அடித்த தங்களது  சாதனையை முறியடித்துள்ளது.  இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 22 சிக்ஸர் விளாசி உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி மும்பைக்கு எதிராக ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி  31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்