ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய பெங்களூரு அணி 20 முடிவில் 8 விக்கெட் இழந்தது 196 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர்.
அட்டமா தொடங்கிய மூன்றாவது ஓவரிலே விராட் கோலி 3 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ரஜத் படிதார் , தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இதற்கிடையில் ரஜத் படிதார் சிறப்பாக விளையாடிய 26 பந்தில் அரைசதம் அடித்து இஷான் கிஷனிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் விளையாடி வந்த தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த மஹிபால் லோமரோர் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேற தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 முடிவில் 8 விக்கெட் இழந்தது 196 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் பும்ரா 5 விக்கெட்டையும், ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…