RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!
பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்தில் 7 ஓவரில் 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது 11 ஓவர் முடிவில் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் 2025-ல் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்ற RCB முதன் முதலாக தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. மேலும், பெங்களூரு மைதானமானது பேட்டிங்கிற்கு பெயர் போன மைதானம். இதன் சுற்றளவு 55 முதல் 60 மீட்டர் மட்டுமே கொண்டுள்ளது என்பதால், சிக்ஸர்கள் பறக்கும். அதனாலேயே இங்கு 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் சேஸ் செய்வது சற்று எளிது.
இதனாலேயே RCB அணி அங்கு அதிக முறை 200 ரன்களுக்கு மேலே அடித்துள்ளது. 2023-ல் SRH அணிக்கு எதிராக 227 ரன்கள், 2016-ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 248 ரன்கள், 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263 ரன்கள் என விளாசியது.
அப்பேற்பட்ட புகழ் கொண்ட பெங்களூரு மைதானத்தில் RCB அணி தற்போது ரன்கள் அடிக்க திணறி வருகிறது. விராட் கோலி (ரன்கள் 7), படிக்கல் (ரன்கள் 4), கேப்டன் ரஜத் படிதார் (ரன்கள் 12) பிலிப் சால்ட் (ரன்கள் 14) ஆகியோர் அடுத்தடுத்து 7 வது ஓவருக்குள் அவுட் ஆகி வெளியேறினர். 11 ஓவரில் 80 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB.