சென்னை அணிக்கு வாழ்த்துக்களை வாரி வழங்கிய பாசக்கார பெங்களூரு அணி நட்சத்திர வீரர்கள்.!

Virat kohli MS Dhoni

5வது முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாப் டு ப்ளசிஸ் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். 

நேற்று ஐபிஎல் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை குஜராத் மாநிலம் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையான மழை பெய்த காரணத்தால் அடுத்த நாளான நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் முறைப்படி 15 ஓவரில் 171 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 15 ஓவரில் 171 எனும் பெரிய இலக்கை துரத்திய சென்னை வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக 2 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில்,  CSK வீரர் ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்.

இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மற்ற ஐபிஎல் அணியில் விளையாடிய வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Virat kohli instagram
[Screenshot of @virat.kohli instagram story]

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவில், சாம்பியன் ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேப்டன் மஹேந்திர சிங் தோனிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

அதே போல, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஃபாப் டு ப்ளசிஸ் (முன்னாள் CSK நட்சத்திர வீரர்) தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற செய்தியை பகிர்ந்து, அதில் வாழ்த்துக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest