சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி…!

Default Image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.அதன் முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

இந்நிலையில்,இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற விடுப்பு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.

மேலும்,இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து கிரிக்கெட்டுகளிலிருந்தும் காலவரையின்றி ஓய்வு எடுத்துள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லே கில்ஸ், ஸ்டோக்கிற்கு தனது ஆதரவை வழங்கி,”கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உயிரியல் பாதுகாப்பு குமிழ்களில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சவாலானது” என்று கூறினார்.

இதற்கிடையில்,இலங்கை வீரர் சங்ககரா கூறுகையில்: “பென் ஸ்டோக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான நேரமாக இருக்க வேண்டும். இது எளிதில் எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது.வீரர்கள் இவ்வளவு மட்டுமே சமாளிக்க முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்:

இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச இரண்டிலும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தார்.ஜூலை 2020 இல் உலகின் முதல் தர டெஸ்ட் ஆல்-ரவுண்டராக பென் தரவரிசைப்படுத்தப்பட்டார். மேலும்,அக்டோபர் 25 ஆம் தேதி 2020 அன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 60 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 107* எடுத்தார்.

பென் 71 டெஸ்ட் போட்டிகளில், 10 சதங்கள் மற்றும்  4,631 ரன்களை எடுத்துள்ளார்,மேலும் 163 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.இந்த நிலையில்,அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்