இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் இருவரும் முக்கிய காரணம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்றால் 76 ரன்கள் தேவை என்ற பரிதாப நிலையில் இருந்தது.அப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் , ஜாக் லீச் இருவரும் மட்டுமே இருந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் அடித்த சதத்தில் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பாதைக்கு சென்றது. மேலும் பந்து வீச்சாளர் ஜாக் லீச் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்கள் குவித்தனர்.
இப்போட்டியில் பந்து வீச்சாளர் ஜாக் லீச் விளையாடும் போது பலமுறை தனது கண்ணாடியை துடைத்து விளையாடியதால் ரசிகர்களின் கவனம் ஜாக் லீச் பக்கம் திரும்பியது.இதை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் போட்டி முடிந்த பிறகு தனது ட்விட்டரில ஒரு பதிவு பதிவிட்டார்.
அதில் பந்து வீச்சாளர் ஜாக் லீச்சிற்க்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க வேண்டும் என ஸ்பெக் சேவர்ஸ் இடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு ஆஷஸ் தொடரின் ஸ்பான்சரான ஸ்பெக் சேவர்ஸ் தனது ட்விட்டரில் ” ஜாக் லீச்சிற்க்கு வாழ்நாள் முழுவதும் கண்ணாடி வழங்குவதாக கூறினார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…