டெல்லிக்கு எதிராக களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ்… ஹின்ட் கொடுத்த சிஎஸ்கே.!

சென்னை அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் நீண்டநாள் கழித்து, டெல்லிக்கு எதிராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணியால் 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரிதளவில் களமிறங்கவில்லை, இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
சென்னை அணி நடப்பி ஐபிஎல் தொடரில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதன்மூலமாக ஸ்டோக்ஸ் வரும் மே 10இல் சென்னை சேப்பாக்கத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கலாம் என்று சென்னை அணி ஹின்ட் கொடுத்துள்ளது.<
Freeing up those big arms! ????????#WhistlePodu #Yellove ???????? @benstokes38 pic.twitter.com/rICR2sydwY
— Chennai Super KingsCSKvsDC (@ChennaiIPL) May 9, 2023
/p>