12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12 ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில், கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது அவர் அடித்த பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது அவரின் விரலில் காயம் ஏற்பட்டது.
இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்றும் அணியுடன் இருந்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் அவர் இடது விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவரால் 12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார். அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வர் என்று கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…