டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ் ஆவார்.
ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி களமிறங்கும்போது இந்தியா 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதைதொடர்ந்து, இன்று இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. இன்றைய ஆட்ட முடிவில் 77 ஓவரில் 6 விக்கெட் இழந்து 316 ரன் எடுத்து 126 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டைஇழந்தார்.
#INDvENG : சதத்தை தவறவிட்டது குறித்து கே.எல்.ராகுல்!
இதனால் டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்தவர் என்ற மோசமான சாதனையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். அவர்கள் நேருக்கு நேர் மோதிய 25 இன்னிங்ஸ்களில், ரவி அஸ்வின் மொத்தம் 623 பந்துகளை பென் ஸ்டோக்ஸிடம் வீசியுள்ளார். ஸ்டோக்ஸுக்கு எதிராக 232 ரன்களை அஸ்வின் விட்டுக்கொடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸைத் தவிர, அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் 11 முறையும், அலஸ்டர் குக் 9 முறையும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை நெருங்கி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இதுவரை 495 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…