புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்.! – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

Default Image

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்.

இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட்டை அடுத்து இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் 81-வது கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் ஆனார். இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குநர் ராப் கீ பரிந்துரையை தொடர்ந்து, ECB இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி புதிய கேப்டன் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இறுதியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதனால், இங்கிலாந்து அணி மீதும், கேப்டன் ஜோ ரூட் மீதும் கடும் விமர்சனங்கள் குவிந்த நிலையில், தற்போது புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 2013 டிசம்பரில் பென் ஸ்டோக்ஸ் தனது டெஸ்டில் அறிமுகமானார். 2017 பிப். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டியில் தற்போது 35.89 சராசரியில் 5,061 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். மேலும் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இது ஒரு உண்மையான பாக்கியம், இந்த கோடையில் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக ஜோ ரூட் செய்த அனைத்திற்கும், நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். டிரஸ்ஸிங் ரூமில் ஒரு தலைவராக எனது வளர்ச்சியில் அவர் ஒரு பெரிய பகுதியாக இருந்தார். மேலும் இந்த பாத்திரத்தில் அவர் எனக்கு உறுதுணையாக தொடர்ந்து இருப்பார் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்