கெவின் பீட்டர்சன் சாதனையை முறியடித்த பென் டக்கெட் ..!
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் வெற்றியின் முனைப்பில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் மற்றும் ஜடேஜாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை சேர்த்தது ஆல்-அவுட் ஆனது.
இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது விக்கெட்டை எடுக்க இந்திய அணி மிகவும் திணறியது. ஒரு கட்டத்தில் அஸ்வின் பென் டக்கெட் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
#INDvsENG : அடுத்தடுத்து சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல் ..! 322 ரன்களில் இந்திய அணி முன்னிலை..!
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட் வெறும் 139 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 2000ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக, இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 150 ரன்கள் எடுத்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை முறியடித்து பென் டக்கெட் முதலிடத்தில் உள்ளார்.
இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு கெவின் பீட்டர்சன் இந்திய மண்ணில் விளையாடும் போது 201 பந்துகளில் 150 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது, பென் டக்கெட் வெறும் 139 பந்துகளில் 150 ரன்களை எட்டி கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் இந்திய மண்ணில் வேகமாக 150 ரன்கள் அடித்தவர்கள் :
- பென் டக்கெட் – 139 பந்துகள்
- கெவின் பீட்டர்சன் – 201 பந்துகள்
- இன்சமாம் உல் ஹக் – 209 பந்துகள்
- ஒல்லி போப் – 212 பந்துகள்
- ப்ரெண்டன் மெக்கல்லம் – 218 பந்துகள்