சுப்மன் கில்லை நம்புங்க .. ஒரு கேப்டனா கண்டிப்பா திரும்ப வருவார் ! நம்பிக்கை அளிக்கும் மேத்யூ ஹைடன் !!

Published by
அகில் R

சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக  சுப்மன் கில் செயல்பட ஆரம்பித்தார். இந்த தொடரின் தொடக்கத்தில் நன்றாக பேட்டிங் ஆரம்பித்த அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 426 ரன்கள் எடுத்திருந்தாலும் அவரை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பல கலவையான விமர்சனங்கள் சமூக வளைத்தளத்தில் எழுந்தது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டதனால் தான் அவரால் சரியாக பேட்டிங்கில் செயல்பட முடியவில்லை என கருத்துக்களும் எழுந்தது. இந்நிலையில், அவரால் ஒரு கேப்டனாக ஒரு பேட்ஸ்மானாக திரும்பவும் வருவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் பேசி இருந்தார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “ஒரு கேப்டனாக தன்னை நிருபித்து கொள்ள கில் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு முறை ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் வாக் எங்களிடம் பேசும் பொழுது, ‘நான் கேப்டனாக இருப்பதால் யாரும் காத்துக் கொண்டே இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு கேப்டன் போல நடந்து கொள்ளுங்கள். அதே நேரம் உங்கள் மாநில அணிக்காக விளையாடும் பொழுது நீங்கள் அதை அப்படியே பின்பற்றுங்கள்.

அதை தொடர்ந்து நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாட வரும் பொழுது கேப்டனாக என்னுடைய வேலை எளிதாகிவிடும்’ என்று அவர்  கூறினார். இதே போல தற்போது கில்லை அவருடைய அணியில் இருக்கும் வீரர்கள் ஒரு கேப்டனாக நம்பவும் மதிக்கவும் வேண்டும். ஒரு கேப்டனாக அவரால் முடியுமா? என்று என்னை கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசிய பொழுது கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

28 minutes ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

40 minutes ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

48 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : பும்ரா விளையாடுவாரா? அகர்கர் சொன்ன தகவல்!

டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…

57 minutes ago

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

2 hours ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

2 hours ago